81 அடி ஆறுமுகப் பெருமான் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
ADDED :3947 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்தூர் 81 அடி ஆறுமுகப் பெருமான் கோவிலில் புத்தாண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. எஸ்.குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகப் பெருமான் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நிறுவனர் சின்னதம்பி சுவாமிகள் தலைமை தாங்கினார். வடிவேல் அடிகளார், சன்னியாசி, தொழிலதிபர்கள் பாபு, வெங்கடேசன், சக்திவேல் ராஜசேகர் கலந்து கொண்டனர்.