உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!

விழுப்புரம் சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!

விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில்ஆருத்ரா தரிசனம் நடந்தது.
விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருவாதிகை நட்சத்திரம், பவுர்ணமிசேர்ந்து வந்ததை யொட்டி, நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.இதையொட்டி காலை 7:00 மணிக்குசிவகாமிஅம்பாள் சமேத நடராஜர் உற்சவர் சிலைக்கு சிறப்புஅபிஷேகம்,ஆராதனை நடந்தது.

தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மலர்களால்அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு தீபாரா
தனை நடந்தது.மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம்வழங்கப்பட்டது. முன்னாள் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !