சந்தனக்காப்பு அலங்காரத்தில் விஜயராகவ பெருமாள்!
ADDED :3937 days ago
பள்ளிப்பட்டு: விஜயவள்ளி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு உற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சனிக்கிழமையை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
சொரக்காய்பேட்டை அடுத்த, கொற்றலை ஆற்றங்கரையில் உள்ளது விஜயவள்ளி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில். 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், மார்கழி மாத அதிகாலை உற்சவம், பிரம்மோற்சவம், ஏகாதசி உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம், சனிக்கிழமையை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனக் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. சொரக்காய்பேட்டை, பள்ளிப்பட்டு, நகரி, சிந்தலப்பட்டடை, நாராயணவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.