உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாபுரியில் வள்ளி - முருகன் திருக்கல்யாண வைபவம்!

சிறுவாபுரியில் வள்ளி - முருகன் திருக்கல்யாண வைபவம்!

கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரியில் நடைபெற்ற வள்ளி - முருகன் திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், சோழவரம் வட்டார, சிறுவாபுரி வள்ளி - முருகன் திருக்கல்யாண பக்த ஜன சங்கம் சார்பில், காலை 6:00 மணி முதல், வினாயகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மை, ஆதி மூலவர், பைரவர் மற்றும் நவக்கிரங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதை தொடர்ந்து, 9:00 மணியளவில், வள்ளி - முருகன் உற்சவருக்கு, அபிஷேக ஆராதனை, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தரிசிக்க 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு, காலை சிற்றுண்டியும், மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !