அம்மன் கோவிலில் இருமுடி விழா!
ADDED :3934 days ago
திருத்தணி: திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 16ம் ஆண்டு, அய்யப்ப சுவாமிகளின் இருமுடி விழா நடந்தது.
இதையொட்டி, காலை, 9:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 70க்கும் மேற்பட்ட அய்யப்ப சுவாமிகளுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, பக்தி பாடல்கள் பாடி வழிபட்டனர்.