ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :3934 days ago
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று, பவுர்ணமியை முன்னிட்டு, காலை, 8:00 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு, 200 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனையும் மற்றும் உற்சவர் வீதியுலாவும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலிலும் நேற்று மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.