உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் புத்தாண்டு உண்டியல் காணிக்கை36 லட்சம்!

திருத்தணி முருகன் கோவில் புத்தாண்டு உண்டியல் காணிக்கை36 லட்சம்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், திருப்படித் திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில், முருகப் பெருமானை தரிசித்த பக்தர்கள், 36.25 லட்சம் ரூபாயை, காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலில், கடந்த மாதம், 31ம் தேதி, திருப்படித் திருவிழா மற்றும் ஜன., 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடந்தது. இதில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தினர்.

இந்நிலையில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டது. பின், 200க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது. இதில், 36,25,233 ரூபாய்; 215 கிராம் தங்கம் மற்றும் 2,633 கிராம் வெள்ளி, காணிக்கையாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !