காரிமங்கலம் மலைக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில் நடந்த, ஆருத்ரா தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரிமங்கலம், ஸ்ரீ அபிதகுஜாம்மாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, அதிகாலை நான்கு மணிக்கு ஸ்வாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு களி பிரசாதத்தை எம்.எல்.ஏ., அன்பழகன் வழங்கினார். கோவில் குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
* காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரமடம் ஸ்ரீ வேத நாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை நான்கு மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜீனஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், குமாரசாமி பேட்டை சிவசுப்பிரமணிசாமி கோவிலில் உள்ள நடராஜர், அரூர் தீர்த்தகிரிஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதீஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் திருவீதி உலா நடந்தது.