உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹெத்தையம்மன் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு

ஹெத்தையம்மன் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, நேற்று துவங்கி, 12ம் தேதிவரை நடக்கிறது. பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், பெப்பேன், எப்பநாடு மற்றும் சின்னகுன்னூர் கிராமங்களில் உள்ள உள்ள ஹெத்தையம்மன் கோவில்களில் இருந்து, பக்தர்கள் செங்கோல் எடுத்து, வண்ணக் குடைகளின் கீழ், அம்மனை ஊர்வலமாக மடிமனைக்கு அழைத்து சென்றனர்.இங்கு, பக்தர்கள் ஒருவாரம் விரதம் மேற்கொள்கின்றனர். இவ்விழாவின் ஒரு கட்டமாக, ஹெத்தையம்மன் கிணற்றில் மறைந்து மாயமானதாக நம்பப்படும் "ஆலுகேரு பகுதியில் சிறப்பு பூஜை நடந்தது.பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள், கடைக்கம்பட்டி, கன்னேரிமுக்கு பனகுடி வழியாக, கேர்பெட்டா சுத்தகல் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு, பக்தர்கள் காணிக்கை செலுத்தி அம்மனை வழிப்பட்டனர். 7ம் தேதி பேரகணி மடிமனையிலும், 9ம் தேதி காத்துகுளி மடிமனையிலும், 10ம் தேதி ஒன்னதலை மடிமனையிலும் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !