ஐயப்பன் கோயில் மார்கழி உற்சவம்
ADDED :3973 days ago
சோழவந்தான் : சோழவந்தான் ஐயப்ப சுவாமி கோயிலில் மார்கழி மாத உற்சவத்தில் மின்விளக்கு ரதத்தில் புலிவாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இக்கோயிலில் பக்தர்கள் சுவாமிக்கு நெய், மஞ்சள் அபிஷேகம், தீாராதனைகள் காட்டி பூஜை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வழிநெடுக பக்தர்கள் பூஜை செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் தலைவர் கருவீபத்திரன், நிர்வாகிகள் நாராயணன், சேகரன் செய்திருந்தனர்.