உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொழுமம் நடராஜர் கோவிலில் திருக்கல்யாணம்

கொழுமம் நடராஜர் கோவிலில் திருக்கல்யாணம்

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கொழுமம் நடராஜர் கோவிலில் திருக்கல்யாணம் மற்றும் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மடத்துக்குளம் அருகே வரலாற்று சிறப்பு மிக்க கொழுமம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கு கடந்த 4ம் தேதி இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இரவு 10.00 மணிக்கு, அம்பாளுக்கும், நடராஜருக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது.நேற்றுமுன்தினம் மகா அபிேஷகத்துடன் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரங்கள், கணபதி ேஹாமம், பால், தயிர்,தேன், அபிேஷகங்கள், சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !