மருந்தீசர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :4029 days ago
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி, பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீசர் கோவிலில், திருவாதிரையை முன்னிட்டு, நடராஜப்பெருமான் ஆருத்ரா தரிசனம் அளித்தார். விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலையில், ஸ்வாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த, 10 நாட்கள் மாணிக்கவாசகர் நடராஜ மண்டபத்தில் எழுந்தருளினார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாஸ்கரன், கணக்கர் சீனிவாசன் ஆகியோர் செய்தனர்.