வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு
ADDED :3973 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழாவையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலசஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சஆவன பூஜை, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. மூலவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்து காலை 7.00 மணிக்கு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தீபாராதனை நடந்தது. திருவெம்பாவை பாடப்பட்டு 8.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. சுவாமி கோவிலை அடைந்தவுடன் 11.00 மணிக்கு திருவூடல் வைபவம் நடந்தது.