உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் கொண்டத்து காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி!

பாரியூர் கொண்டத்து காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி!

கோபி : பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கார பூஜை நடந்தது. கோபி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், ஜனவரி மாதத்தில் குண்டம் தேர்த்திருவிழா நடக்கும். நடப்பாண்டு திருவிழா, கடந்த, 25ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு விசேஷ சந்தனக்காப்பு அலங்கார பூஜை நடந்தது.இங்கு அம்மனுக்கு நடக்கும் சந்தனக்காப்பு மிகவும் விசேஷமானது. பாரியூர் செல்லும் பக்தர்கள், கோவிலில் அன்னையின் முக அழகை மட்டுமே காணமுடியும். திருவிழாவை முன்னிட்டு நடக்கும் சந்தன காப்பு அலங்காரத்தின் போது, அன்னையின் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும். அன்று, சந்தனக்காப்பு அலங்காரத்தில், எட்டு கரங்களுடன் காட்சியளிப்பார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.பாரியூர் அம்மன் அன்னதான குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று காலை, மாவிளக்கு பூஜை நடக்கிறது. முக்கிய விழாவான, குண்டம் திருவிழா, 8ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு ந டக்கிறது. கோவிலின் முன், 50 அடி நீள கு ண்டம் அமைக்கப்படும். அதிகாலை, அம்மனுக்கு சிறப்பு பூஜை, வாக்கு கேட்கும் நிகழ்ச்சிக்குப்பின், தலைமை பூசாரி புதுப்பாளையம் சண்முகம், குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து, குண்டம் இறங்குவார். தொடர்ந்து, பூசாரிகள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவர். 9ம் தேதி மாலை, 4 மணிக்கு தேரோட்டமும், 10ம் தேதி இரவு, 12 மணிக்கு மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், அம்மன் திருவீதியுலா, கோவிலில் இருந்து புறப்பட்டு கோவில் வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !