உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி சங்கரரால் துவக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதி தேர்வு!

ஆதி சங்கரரால் துவக்கப்பட்ட சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதி தேர்வு!

சிருங்கேரி: சிருங்கேரி சாரதா பீட இளைய சங்கராச்சாரியராக, ஸ்ரீ சுப்ப வெங்கடேஸ்வர பிரசாத் சர்மாவை, தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சிருங்கேரி மடத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பிரசாத் சர்மாவுக்கு இமமாதம் 23ம் தேதி சன்னியாசம் அளிக்கப்படும் என்று சங்கரச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் சிருங்கேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்தார்.

ஆதி சங்கரரால் துவக்கப்பட்ட 4 சங்கர மடங்களில் ஒன்றான சிருங்கேரி மடத்தின் 36வது சங்கராச்சாரியாராக ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமிகள் இருந்து வருகிறார்- 1989ல் பீடாதிபதியான தற்போதைய சங்கராச்சாரியார், சநாதன தர்மத்தையும் தோந்த தத்துவத்தையும் பரப்பி வந்தார். பல புதிய கோயில்களுக்கு கும்பாபிசேகம் செய்து வைத்த சங்கராச்சாரியார், பல சிதிலம் அடைந்த கோயில்களையும் புனருத்தாரணம் செய்துள்ளார்- நாடு முழுவதும் விஜய் யாத்ரா என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்-. எளிய நடையில் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு மொழிகளி்ல் தர்மத்தைப் போதித்திருக்கிறார். பாரம்பரிய பாடசாலைகளைத் தோற்றுவித்து, வேதம் பயில ஏற்பாடு செய்தார்- இந்தியாவிலும் உலகெங்கும் மடத்தின் பல கிளைகளைத் தோற்றுவித்து, தர்மத்தைப் போதிக்கச் செய்தார்- கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் பல சேவைகள் செய்யப்பட்டுள்ளன-. தற்போதைய சங்கராச்சாரியார் பீடாதிபதியான 25வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நபைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத் சர்மாவை தனது வாரிசாக அறிவித்தார்-. புதிதாக பொறுப்பேற்க இருக்கும் இளைய சங்கராச்சாரியார், திருப்பதி குப்ப சிவசுப்ரமண்ய அவதானி- சீதாநாகலட்சுமி தம்பதியின் மகனாக 1993ல் பிறந்தார், இவருடைய தந்தை, திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான வேத பாடசாலையில் முதல்வராக இருக்கிறார். 5 வயதில் உபநயனம் செய்யப்பட்டு, அவருடைய தாத்தாவான குப்ப ராமகோபால வாஜபேயயாஜியிடம் கிருஷ்ண யஜுர் வேதம் பயின்றார். 2006, 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் சிருங்கேரி மடத்திற்கு வந்த இளைய சங்கராச்சாரியார், சங்கராச்சாரியாரின் மேற்பார்வையில் சாஸ்திரங்களைப் பயில ஆரம்பித்தார். மகா சந்நிதானத்திடம் தர்க்க சாஸ்திரத்தை இளைய சங்கராச்சாரியார் கற்றுத் தேர்ந்தார்-. இளைய சங்கராச்சாரியாரை முறைப்படி இளைய சங்கராச்சாரியாராக அறிவிக்கும் நிகழ்ச்சி, ஜனவரி 22, 23 தேதிளில் சிருங்கேரியில் நடைபெற உள்ளது-. 23ம் தேதி அவருக்கு சங்கராச்சரியார் முறைப்படி சன்னியாசம் வழங்குவார்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !