உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா கோலாகலம்!

பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் விழா கோலாகலம்!

கோபி : கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, இன்று அதிகாலை நடைபெற்றது.

கோவிலின் அம்மன் சன்னதிக்கு எதிரே, 60 அடி நீளத்தில், பக்தர்கள் பூமிதிக்க வசதியாக, குண்டம் அமைந்துள்ளது. பூமிதிக்கும் இடத்தில் ‘கரும்பு’ எனும் ஊஞ்ச மரக்கட்டைகள், நேற்று முதல் குவிக்கப்பட்டது.சாணார்பதி வீரமக்கள் சார்பில், கட்டுக்கு, 20 பனை ஓலைகள் வீதம், 17 டிராக்டர் மூலம் கரும்பு குவிக்கப்பட்டுள்ளது. கோவில் ஐதீகம் முறைப்படி, கற்பூரம் மூலம் நெருப்பு மூட்டுவர். குண்டம் இறங்க வசதியாக, இரு பாலருக்கும் தனித்தனியே, மூங்கில் தடுப்புகள் அமைத்து, வரிசையில் அணிவகுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்கள், நேற்று முன்தினம் முதல், கோவில் வளாகத்தில் வரிசையாக அமர்ந்துள்ளனர்.

வரிசையில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. இன்று அதிகாலை, அம்மனுக்கு சிறப்பு பூஜை, வாக்கு கேட்கும் நிகழ்ச்சிக்கு பின், தலைமை பூசாரி சண்முகம், குண்டம் இறங்கினார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !