உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமாரியம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததா? பக்தர்கள் சிறப்பு பூஜை!

மகாமாரியம்மன் கோவிலில் அம்மன் கண் திறந்ததா? பக்தர்கள் சிறப்பு பூஜை!

சேலம் : சேலம், களரம்பட்டி நேரு நகரில் மகாமாரியம்மன் கோவிலில், அம்மனின் ஐம்பொன் விக்ரகம் கண் திறந்ததாக செய்தி பரவியதை அடுத்து, சிறப்பு பூஜை செய்து, பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

சேலம், களரம்பட்டி, நேருநகர் மெயின் ரோட்டில், மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், தினம் தோறும் காலையும், மாலையும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோவிலின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், கோவிலின் உள்ளே இரண்டு பெண்கள் சிரித்து பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.ஆனால், சிறுவர்களின் தகவலை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று காலை, கோவிலின் பூஜாரி கந்தன், பூஜை செய்ய கோவிலுக்கு சென்று பார்த்தபோது, மூலவிக்ரகம் அம்மனின் கண்களில் கறுப்பு மை போல் காணப்பட்டது.இது குறித்து பூஜாரி, தர்மகர்த்தா கிருஷ்ணசாமிக்கு தகவல் கொடுத்தார். அதை அடுத்து, கிருஷ்ணசாமி தலைமையில் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.கோவில் மூல விக்ரகத்தில் உள்ள அம்மன் சிலை ஐம்பொன்னால் ஆனது. அவை, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால், அதில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதனை அம்மன் கண் திறந்து விட்டதாக செய்தியை பரப்புகின்றனர் என, அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.சேலத்தில் அம்மன் கண் திறந்ததாக, நேற்று மாலை பரவிய செய்தியால், களரம்பட்டி பகுதி மக்கள் மட்டுமின்றி, பிற பகுதி மக்களும், மகாமரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !