உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் பாதம் கோவிலில் சுற்றுச்சுவர் அமைக்க மண் ஆய்வு!

ராமர் பாதம் கோவிலில் சுற்றுச்சுவர் அமைக்க மண் ஆய்வு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், ’ராமர் பாதம்’ கோவிலில் அடித்தளம் அரிப்பு ஏற்பட்டு, இடிந்த சுற்றுச் சுவருக்கு பதிலாக புதிய சுவர் அமைக்க, மண் பரிசோதனை நடந்தது. சீதையை மீட்க அனுமன் மற்றும் வானர சேனைகள், இலங்கைக்கு செல்ல பாலம் அமைப்பதை, ராமேஸ்வரத்தில் மணல் மேடு நிறைந்த உயரமான பகுதியில் நின்று ராமர் பார்வையிட்டதாக, ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் தான், பல நூறு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட, ’ராமர் பாதம்’ கோவில் உள்ளது. இக்கோவிலின் அடித்தளம் அரிக்கப்பட்டு, சுற்றுச்சுவர் சேதமடைந்தது. புதிய சுற்று சுவர் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. நேற்று, திண்டுக்கல் தனியார் பொறியியல் கல்லூரியின் சிவில் பிரிவு உதவி பேராசிரியர் இருவர், கோவிலை சுற்றியுள்ள மணலில், 6 அடி ஆழத்திற்கு துளையிட்டு, மண் பரிசோதனை செய்தனர். சுற்றுச்சுவர் வடிவமைப்பு குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் கோவில் நிர்வாகத்திடம் அறிக்கை வழங்க உள்ளனர். கோவில் இணை கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், ”ஆய்வறிக்கை வழிகாட்டுதல்படியும், மாநில இந்து அறநிலைய ஆணையர் உத்தரவுப்படியும், மழை, கடல் காற்றில் அரிப்பு ஏற்படாதபடி சுற்றுச்சுவர் அமைக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !