உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பந்தகால் முகூர்த்தம்!

சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பந்தகால் முகூர்த்தம்!

சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் பிப்ரவரி 8ம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்தையொட்டி பந்தகால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது. சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்து அறநிலையத் துறை சார்பில் 73 லட்சம் ரூபாய் மதிப்பில்  திருப்பணிகள் துவங்கப்பட்டு ராஜகோபுரம், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட அனைத்தும் சீரமைப்பு பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 8ம் தேதி  நடக்கிறது. இதனையொட்டி பந்தகால் முகூர்த்தம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. இதனையொட்டி அனந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சன்னதி முன் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் நகர மன்ற துணைத்  தலைவர் செந்தில்குமார், திருப்பணிக் குழுத் தலைவர் டாக்டர்கள் நடராஜன், முத்துக்குமரன், கவுன்சிலர் ரமேஷ், அ.தி.மு.க., ராஜா, கோவில் நிர்வாக  அலுவலர் முருகன், வாசு, ராஜசேகர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !