உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தபால் வழி சபரிமலை பிரசாதம் பக்தர்களிடம் நல்ல வரவேற்பு!

தபால் வழி சபரிமலை பிரசாதம் பக்தர்களிடம் நல்ல வரவேற்பு!

கோவை: ஐயப்ப பக்தர்களுக்கான சபரிமலை பிரசாதங்கள், தபால் வழியாக அனுப்பும் முறை மீண்டும் துவங்கியது. கார்த்திகை மற்றும் மார்கழி  மாதங்களில் ஏராளமான ஐயப்ப  பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்வதுண்டு. அவ்வாறு இயலாத பட்சத்தில்,  பக்தர்களுக்கு தேவையான பிரசாத ங்கள் தபால் நிலையத்தின் வழியாக தேவஸ்தானம்  அனுப்பி வந்தது. இதில், காலதாமதமாக அனுப்பப்படும் ‘அரவண பாயாசம்’,  கெட்டுப்÷ பாவதாக வந்த குற்றச்சாட்டுகளால், கடந்த சில ஆண்டுகளாக இம்முறை  நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது சபரிமலையில் அமைக்கப் பட்ட  தற்காலிக  தபால் நிலையத்தின் வாயிலாக மீண்டும் அரவண பாயாசம் அனுப்பும் சேவை  துவங்கி யுள்ளது.  இதற்கான, பிரத்யேக பார்சல்களில்  பி ரசாதம் பக்தர்களுக்கு அனுப்பப்படுகிறது. சபரிமலை தபால் நிலைய அதிகாரி சாயி பிரகாஷ் கூறுகையில்,  “தபால் வழியாக சபரிமலை பிரசாதம்  வழங்குவதற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு  உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இம்முறையை மீண்டும் துவங்கியுள்ளோம்.  கடந்த இருமாத ங்களில், 2100  காட்டன்  பெட்டிகளில் பிரசாதங்கள்  அனுப்பப் பட்டுள்ளன,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !