உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை!

சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை!

சபரிமலை: சிவகங்கை மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சமிதி சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள கலந்து கொண்டனர். 

பாஸ்கரன் குருசாமி தலைமையில் பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சமிதியை சேர்ந்த 250 பக்தர்கள் இருமுடி கட்டு ஏந்தி சபரிமலை வந்து சுவாமி தரிசனம் முடித்த பின்னர் மாளிகைப்புறம் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விளக்கு பூஜை நடத்தினர். 150க்கும் மேற்பட்ட விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி அதை சுற்றி பக்தர்கள் அமர்ந்து பஜனை பாடினர். சபரிமலைக்கு முதன் முறையாக வரும் கன்னி ஐயப்ப பக்தர்களுக்காக இந்த பூஜை நடத்தப்படுவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக சன்னிதானத்தில் விளக்குபூஜை நடத்தி வருவதாகவும் பாஸ்கரன் குருசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !