வன்னிய பெருமாள் கோவிலில் வீணை இசை நிகழ்ச்சி!
ADDED :4131 days ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், மார்கழி மகோற்சவத்தை முன்னிட்டு ’வீணை இசை நிகழ்ச்சி’ நடந்தது. முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவிலில், 3ம் ஆண்டு மார்கழி மகோற்சவம் கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும் திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இரவு, வீணா ஆர்ட்ஸ் அகடமி சுகுமார் குழுவினரின் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது.