சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அக்காரவடிசில் வைபவம்!
ADDED :4008 days ago
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவத்தின் 27வது நாளான நேற்று ஆண்டாள், பெருமாளுடன் சேர்க்கை யாகும் கூடாரவல்லி நிகழ்ச்சியும், அக்கார வடிசில் வைபமும் நடந்தது.அதன்படி ஆண்டாள், தன்னை ரெங்க நாதருடன் சேர்த்து வைத்தால் 100 அண்டாவில் பொங்கல் (அக்காரவடிசில்), வெண்ணெய் படைப்பதாக அழகர் கோயில் பெருமாளிடம் வேண்டினார். இதனை பின்னாளில் ராமானுஜர் நிறை வேற்றி வைத்துள்ளார். இவ்விழாவானது மதுரை அழகர் கோயிலுக்கு அடுத்தபடியாக, பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடக்கிறது. நேற்று காலை 5 மணிக்கு பெருமாள் ரங்க மன்னார் திருக் கோலத்தில், ஆண்டாளுடன் சேர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது.