உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. கூடாரவல்லி பூஜையை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ராமரை ரங்கநாதராகவும், சீதையை ஆண்டாளாகவும் ஜோடித்து கூடாரவல்லி உற்சவத்தை கணேஷ் சர்மா செய்து வைத்தார். மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தங்க தேரில் சாமி அலங்காரம் செய்து அருள் பாவித்தார். பெண்கள் பஜனை பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர். நிர்வாக தலைவர் கோவிந்தசாமி, நிர்வாகிகள் ஆர்யவைஸ்ய சமூகத்தினர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !