உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி திங்கள்... மதி நிறைந்த நன்னாள்...!

மார்கழி திங்கள்... மதி நிறைந்த நன்னாள்...!

ஆதியும், அந்தமும் இல்லா இசையை, ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், ஒரு விழாவாகவே ஆராதித்து வருகிறோம். புனித நுாலான, ’பகவத்கீதை’ மார்கழி மாதத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அருளப்பட்டது. அதனால், இம்மாதம் முழுக்க, நம் முன்னோர், இறைவனை பல வழிகளிலும் வழிபடுகின்றனர். பெண்கள் பாவை நோன்பு நோற்பதையும், ஆண்கள் பஜனை பாடல்களை இசைப்பதையும், காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர். அதிகாலைப்பொழுதில், நாமசங்கீர்த்தன இசை மழையில், நனைந்த கோவை மக்கள்...

கார்த்திகேயன், ராம்நகர்: அடுத்த தலைமுறையினர், நாமசங்கீர்த்தனத்தை தெரிந்துகொள்ள, இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டும். இதன்வாயிலாக இறை பக்தியை அறியலாம்; சங்கீத ஞானத்தை உணரலாம்.

மணியம்: ராம்நகர்: நாமசங்கீர்த்தனம் வாயிலாக மனமும், உள்ளமும் அமைதி பெறும், கேட்பவர்களுக்கும் சந்தோஷம் ஏற்படும். தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், மராத்தி, குஜராத்தி மொழி பாடல்களை எளிதில் நாம் தெரிந்து கொள்ளவும், பழகிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

செண்பகவள்ளி, பெரிய கடைவீதி:
இறைவனுக்கு சேவை செய்ய நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை மார்கழியில் நமக்கு சேவை வாய்ப்பு கிடைக்கிறது. அதை எல்லோரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பரசுராமன், ராம்நகர்: சம்பிரதாய பஜனை என்ன என்பதை தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு. கலியுகத்துக்கு, நாம சங்கீர்த்தனமே தர்மம். அதனால், நாமசங்கீர்த்தனத்தை பின்பற்றுவது காலத்தின் கட்டாயம். இதன் வாயிலாக, உலகம் சுபிட்சமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !