உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவநீதகிருஷ்ணன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நவநீதகிருஷ்ணன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

உடுமலை : உடுமலை, நவநீதகிருஷ்ணன் கோவிலில், கூடார வள்ளி உற்சவம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உடுமலை, பெரியகடை வீதியில் அமைந்துள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலில், ராமானுஜா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், மார்கழி தனுர் மாத பூஜை, பாவை நோன்பு முடிவு கூடாரவள்ளி உற்சவம் சிறப்பு பூஜைகளுடன், துவங்கியது. ராபத்து உற்சவம் நம்மாழ்வார் மோட்ச வைபவத்துடன் வைகுண்டவாசல் விழா, நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பாகவதர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது; அர்ச்சகர்கள் சடகோப சுவாமிகள் மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நடத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !