உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி

மாசாணியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவில் நிதியிலிருந்து 65 லட்சத்து 98 ஆயிரத்து 585 ரூபாய் செலவில், கருணை இல்லம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. 54 லட்சத்து 43 ஆயிரத்து 11 ரூபாய் செலவில் சேவார்த்திகள் ஓய்வு மண்டபமும் கட்டப்பட்டது.ஆற்றின் ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்காக 93 லட்சத்து 46 ஆயிரத்து714 ரூபாய் செலவிலும் கட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மண்டபம் விரைவில் பக்தர்களின் பயன்பாட்டு கொண்டு வரப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !