பொங்கல் விழாவில் வெளி நாட்டினர் பங்கேற்பு
ADDED :3952 days ago
மயிலம்: மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தில் நடந்த மாட்டு பொங்கல் விழாவில் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கொணமங்கலம் கிராமத்தில் சிருஷ்டி பவுண்டேஷன் சார்பில் மாட்டுப் பொங்கல் விழா நடந்தது. பிரான்ஸ், ஜெர்மன் நாடுகளிலிருந்து வந்திருந்த பலர் பொங்கல் வைத்தனர்.சிருஷ்டி இயக்குனர் கார்த்திகேயன், இலக்கியச்சாரல் அமைப்பாளர் மகேஷ்வரன், கருணாகரன், பிரான்ஸ் நாட்டின் சிறப்பு ஆசிரியர் எல்லோடி, ஜெர்மன் டேவிட் உட்பட பலர் பங்கேற்றனர். நமது நாட்டின் கலாசாரம், பண்பாடு குறித்து வெளிநாட்டினருக்கு விளக்கினர். மண்வாசனை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்து.