மாதேஸ்வரன் கோவிலில் விழா!
ADDED :3952 days ago
மேட்டுப்பாளையம் : மாட்டுப்பொங்கலை அடுத்து, குட்டையூர் மாதேஸ்வரன் கோவிலில் விழா நடந்தது.காலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் உள்ள விவசாயிகள், பசுவின் பாலை கொண்டு வந்து, சுவாமி மீது அபிஷேகம் செய்து, சிறிதளவு பாலை வாங்கிச் சென்றனர். விழாவில் பக்தர்களுக்கு சிவன்புரம் காலனி மாதேஸ்வரன் மலை அன்னதான குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் மாதேஸ்வரன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.