லட்சுமி நரசிம்மருக்கு தீர்த்தவாரி!
ADDED :3913 days ago
விழுப்புரம்: பூவரசங்குப்பம் தென்பெண்ணையாற்றில் லட்சுமி நரசிம்மருக்கு தீர்த்தவாரி நடந்தது. விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம், தென் பெண்ணையாற்றில் கடந்த 18ம் தேதி ஆற்றுத் திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு லட்சுமி நரசிம்மர் கோவி லில் காலை 6:00 மணிக்கு மூலவரு க்கு திருமஞ்சனம் நடந்தது. பெருமாளுக்கு தங்க கவச அலங்காரம் செய் யப்பட்டது. காலை 11:00 மணிக்கு உற்சவர் வரதராஜப் பெருமாள், கற்பக விருட்ச வாகனத்தில், கிருஷ்ண அவதாரத்தில் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. வீதியுலா புறப்பாடில், பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.