தை அமாவாசையையொட்டி புதுச்சேரி சுவாமிகளுக்கு தீர்த்தவாரி!
ADDED :3971 days ago
புதுச்சேரி: தை அமாவாசை தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் சுவாமிகளுக்கு நேற்று கடல் தீர்த்தவாரி நடந்தது. கடற்கரைச் சாலை காந்தி சிலை எதிரே, மிஷன் வீதி வரதராஜப் பெருமாள் கோவில், முத்தியால்பேட்டை கடைத்தெரு செல்வவிநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன், அரவிந்தர் வீதி முத்தாலம்மன் உட்பட நகரில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து சுவாமிகள் கடல் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். அங்கு, சுவாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.