மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்
ADDED :146 days ago
நடுவீரப்பட்டு; மலையாண்டவர் கோவில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உலா வந்து, ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.