செஞ்சி ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை
ADDED :18 minutes ago
செஞ்சி; அங்கராயநல்லூர் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் அய்யப்ப பக்தர்கள் கன்னி பூஜை நடந்தது.
செஞ்சி அடுத்த அங்கராயநல்லூர் ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னதியில் கார்த்திகை மாத கன்னி பூஜை நடந்தது. இதை முன்னிட்டு அய்யப்பனுக்கு நெய் அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும் செய்தனர். அய்யப்ப பக்தர்களின் சிறப்பு வழிபாடும், மகா தீபாரதனையும் நடந்தது. இதில் திரளான அய்யப்ப பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.