யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் 25 ஆம் ஆண்டு ஆராதனை விழா
ADDED :230 days ago
திருவண்ணாமலை; கிரிவலப் பாதையில் உள்ள யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் நடந்த 25 ஆம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 25ம் ஆண்டு ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் நிறைவு நாளான இன்று சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. பகவான் யோகி ராம் சுரத்குமார் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.