உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரிவலம் வந்த அண்ணாமலையார்; பாதை முழுவதும் பக்தர்கள் பரவசம்

கிரிவலம் வந்த அண்ணாமலையார்; பாதை முழுவதும் பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி இன்று கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் மஹாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மலை உச்சியில், 11 நாட்களுக்கு தீபம் எரியும். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் தெப்ப திருவிழாவில் நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இன்று பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடக்கிறது. இன்று உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் ஸ்வாமிக்கு மண்டகப்படி செலுத்தி வழிபட்டனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !