81 அடி உயர ஆறுமுக பெருமான் சிலை கட்டுமான பணிகள் ஜரூர்!
ADDED :3913 days ago
ரிஷிவந்தியம்: அத்தியூர் கிராமத்தில் 81 அடி உயர ஆறுமுகபெருமான் சிலை கட்டும் பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் இருந்து சங்கராபுரம் செல்லும் சாலையில் மிக உயரமான 81 அடி ஆறுமுகபெருமான் சிலை கட்டும் பணிகள் கடந்த 2 ஆண்டிற்கு முன் துவங்கியது. சில நாட்களாக பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. தமிழகத்திலேயே மிக பெரிய அளவிலான ஆறுமுக பெருமான் சிலை என்பதால் பணிகள் முடிந்து வழிபாட்டுக்கு வருவது எப்போது என இப்பகுதி பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.