செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நடைபயணம்!
ADDED :3913 days ago
செஞ்சி: செஞ்சியில் இருந்து 350 பேர் நடைபயணமாக திருப்பதிக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா சர்பில் 15ம் ஆண்டு திருப்பதி நடைபயணம் நேற்று துவங்கியது. 48 நாட்கள் விரதம் இருந்த 350 பேர் நேற்று காலை 8 மணிக்கு செஞ்சி சிறுகடம்பூர் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் இருந்து பாதயாத்திரையை துவங்கினர். சேத்துப்பட்டு, ஆரணி, திமிரி, ஆற்காடு, சோளிங்கர், அலமேலு மங்காபுரம் வழியாக 25ம் தேதி காலை கீழ் திருப்பதியை சென்றடைகின்றனர். இவர்களுக்கு ஆங்கேங்கே உணவு மற்றும் இருப்பிட வசதிகளை உபயதாரர்கள் செய்துள்ளனர்.