உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெத்துசெட்டிப்பேட்டை கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்!

பெத்துசெட்டிப்பேட்டை கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்!

புதுச்சேரி: பெத்துசெட்டிப்பேட்டை, சிவசுப்ரமணியர் கோவிலில் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்களை, அமைச்சர்கள் நேற்று பார்வையி ட்டனர். லாஸ்பேட்டை அடுத்த பெத்துசெட்டிப்பேட்டையில், சிவசுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் ௨ம்  தேதி நடக்க உள்ளது.  அதையொட்டி, 3.5 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. திருப்பணியின் ஒரு பகுதியாக, 1.25 கோடி ரூபாய் மதிப் பில், கோவில் மேற்கூரையில் மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருப்பணி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. 2ம் தேதி கும்பா பிஷகம் நடப்பதையொட்டி, யாகசாலை அமைக்கும் பணி உள்ளிட்ட ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.கோவிலில், மூலிகை ஓவியங்கள் மற்றும் ய õகசாலை அமைக்கும் பணியை, அமைச்சர்கள்  பன்னீர்செல்வம், தியாகராஜன், லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வும், திருப்பணிக் குழு தலைவ ருமான வைத்தியநாதன்  ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுந்தரராஜன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு,  செயலாளர் தயாநிதி, பொருளாளர் இளங்கோ, உறுப்பினர் சுகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !