பழநிகோயில் தரிசன டிக்கெட் இ பில் முறையில் வினியோகம்!
ADDED :3908 days ago
பழநி: பழநி மலைக்கோயில் தரிசன கட்டண சீட்டிற்குப் (டிக்கெட்) பதிலாக "இ பில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அதிக வருமானமுள்ள பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம், காலபூஜை சிறப்பு கட்டணங்கள் ரூ.10, ரூ.100, காலபூஜைக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது. இதற்காக அச்சிடப்பட்ட கட்டணசீட்டுகள் பக்தர்களிடம் வழங்கப்பட்டது. இம்முறையை மாற்றி தற்போது, பஸ்களில் வழங்குவதை போல தரிசன கட்டணசீட்டுகளுக்கு பதில் "இ பில் வழங்கப்படுகிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" ஏற்கனவே அபிஷேக பஞ்சாமிர்தம் "இ பில் முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. அதைப்போலவே தரிசன கட்டணச் சீட்டுகளுக்கு பதிலாக "இபில் வழங்குகிறோம். இதைப்போலவே ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் "இ பில்முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது, என்றார்.