உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

செஞ்சி: செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தை அமாவாசை ஊஞ்சல்  உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அங்காளம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 7 மணிக்கு அன்னதானம்  நடந்தது. இரவு 9 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், வானவேடிக்கையும் நடந்தது. இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள்  பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர்,  பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !