மதுரை மீனாட்சி தெப்பத்திருவிழா: வெளிநாட்டினர் பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள்!
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பயணிகள் பங்கேற்க உள்ளனர். மாரியம்மன் தெப்பக்குளத்தில் இவ்விழா பிப்.3ல் நடக்கிறது. அன்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளுகின்றனர். வைகையில் தண்ணீர் இல்லாததால் இரு ஆண்டுகளாக நிலைத்தெப்பத்தில் எழுந்தருளினர். இதனால் வெளிநாட்டு பயணிகள் இந்நிகழ்ச்சியை காண சுற்றுலா துறையும், டிராவல்ஸ் கிளப்பும் ஏற்பாடு செய்யவில்லை.இந்த ஆண்டு தண்ணீர் இருப்பதால் வெளிநாட்டு பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டிராவல்ஸ் நிறுவனங்களில் இதற்கான முன்பதிவுகளும் நடந்து வருகிறது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பம், தெப்பக்குளத்தை சுற்றி வருகிறது. இதை வெளிநாட்டு பயணிகள் தியாகராஜர் கல்லுாரியில் இருந்து பார்வையிட டிராவல் கிளப் மற்றும் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.