உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தேரோட்டம்!

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தேரோட்டம்!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_39149_104656119.jpgதிருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தேரோட்டம்!திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவம் கடந்த, 16ம் தேதி துவங்கியது. தினசரி, உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய விழாவில் ஒன்றான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. காலை, 5:00 மணியளவில், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவ பெருமாள் தேருக்கு எழுந்து அருளினார். பின், காலை 8:00 மணிஅளவில் தேரோட்டம் துவங்கியது. தேரடி, பஜார் வீதி வழியாக தேர் உலா வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வீரராகவ பெருமாள் உற்சவர், மாலை வரை தேரில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவு 10:30 மணிக்கு, கோவிலுக்கு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !