உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தியநாத சுவாமி கோவில் யாகசாலை பூஜை துவங்கியது!

வைத்தியநாத சுவாமி கோவில் யாகசாலை பூஜை துவங்கியது!

திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூஜை நேற்று துவங்கியது. இக்கோவிலில் வரும் 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவ ங்கியது. தொடர்ந்து கோமாதா பூஜை செய்யப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம் நடந்தது. மயிலாடுதுறை சிவபுரம்  வேதசிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார், ஸ்தல சிவாச்சாரியார்கள் தண்டபாணி குருக்கள், திருஞானசம்பந்த குருக்கள்  தலைமையில் பூஜை நடந்தது. யாகசாலை பூஜையில் கோவில் செயல்அலுவலர், ஆய்வாளர், திருப்பணிக்குழுவினர் மற்றும் கும்பாபிஷேக  விழாக்குழுவினர் பங்கேற்றனர். யாக சாலையில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு தலா 9 யாக குண்டங்களும், பரிவார தெய்வங்களுக்கு 20 யாக  குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 60 சிவாச்சாரியார்கள் பூஜை செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !