ஹைட்ராலிக் செயற்கை காலுடன் திருமலைக்கு பாதயாத்திரை பயணம்!
ADDED :4009 days ago
திருப்பதி: ஹைட்ராலிக் செயற்கை கால் பொருத்திய பக்தர் ஒருவர், பாதயாத்திரையாக, திருமலைக்கு வந்தார்.ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆதித்திய மேத்தா, 35. இவர், ஒரு விபத்தில், தன் இடது காலை இழந்தார். வெளிநாட்டில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட, ஹைட்ராலிக் செயற்கை காலை பொருத்தி, சர்வதேச, பாராசைக்கிளிங் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றார். 2013 - 2014ல், லிம்கா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். இவர், ஏழுமலையானுக்கு வேண்டுதலை நிறைவேற்ற, ஸ்ரீவாரிமெட்டு மார்க்கத்தில் இருந்து, பாதயாத்திரையாக, திருமலை வந்தார். அவர், ஹைட்ராலிக் செயற்கை கால் உதவியுடன், 2,400 படிகளை, 2:05 மணி நேரத்தில் கடந்தார்.