உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் வகுளாதேவி தாயாருக்கு தங்க கவச அலங்காரம்

திருமலையில் வகுளாதேவி தாயாருக்கு தங்க கவச அலங்காரம்

நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில், வகுளாதேவி தாயாருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திருமலை கோயிலில், ஆனந்த நிலையத்திற்கு வடமேற்கு பகுதியில், புராதன காலம் முதல், சமையல் அறை அமைந்துள்ளது. இங்கு, வெங்கடேச பெருமாளின் தாயார் வகுளாதேவிக்கு, தனி சன்னிதி உள்ளது. வகுளாதேவி விக்ரகத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தயார் செய்யப்பட்ட புதிய தங்கக் கவசத்தை, நேற்று முன்தினம், தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில், கோயில் அர்ச்சகர்கள் அணிவித்தனர். வெங்கடேச பெருமாளுக்கு விருப்பமான, பல்வேறு உணவுப் பண்டங்களை தயாரிக்கும் சமையலை மேற்பார்வையிடுவது போன்று, இங்கு வகுளாதேவியின் விக்ரகம், ஐதீக முறைப்படி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !