பிடாரியம்மனுக்கு ராகுகால சிறப்பு பூஜை
ADDED :3910 days ago
திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் உள்ள எல்லை பிடாரியம்மனுக்கு, ராகுகால சிறப்பு பூஜை நடந்தது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு சாலையில் எல்லை பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை நேற்று முன்தினம் (25ம் தேதி) நடந்தது. அன்று மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சந்திரசேகர், லட்சுமணன், முருகன், ஜெயராமன் செய்திருந்தனர்.