வேணுகோபால சுவாமி கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்
ADDED :3911 days ago
கீழ்மணம்பேடு: கீழ்மணம்பேடு, வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. திருமழிசை அடுத்துள்ள கீழ்மணம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள, ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. முன்னதாக, கடந்த, 24ம் தேதி, வாஸ்து சாந்தியும், ரக் ஷா பந்தனமும், அதன்பின், 25ம் தேதி, துவார பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையும், சிறப்பு திருமஞ்சனமும் நடந்தன. பின், நேற்று காலை, கோ பூஜையும், திருப்பள்ளி எழுச்சியும் நடந்தன. அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. மாலை, சுவாமி திருவீதி உலா நடந்தது.