பழநிமலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.82 கோடி!
ADDED :4235 days ago
பழநி: பழநிமலைக்கோயில் உண்டியலில் 13 நாட்களில் ரூ.1.82 கோடி வசூலானது..பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 665 கிராம், வெள்ளி 11 ஆயிரத்து 350 கிராம், வெளிநாட்டு கரன்சி 466, ரொக்கமாக ஒருகோடியே 82 லட்சத்து 85 ஆயிரத்து 637 ரூபாய் வசூலாகியுள்ளது.தங்கம், வெள்ளியில் ஆன, தாலி,மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.