வீரநாராயண பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா!
ADDED :3912 days ago
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா நடந்தது. விழாவையொட்டி ஸ்ரீ செண்பக மன்னனார் சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். மேலும், சிறப்பு பூஜை நடந்தது. சூரியன் வடக்கு நோக்கி தனது ரதத்தை செலுத்தும் நாளாக இவ்விழா கொண்டாடப்பட்டது.