திருப்பதியில் நடிகர் அஜித் சாமி தரிசனம்!
ADDED :3872 days ago
திருப்பதி: நடிகர் அஜித், திருப்பதியில், சாமி தரிசனம் செய்தார். வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜித்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர். சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் நின்று, அஜித் போட்டோக்கள் எடுத்துக் கொண்டார். சிலர் அவருக்கு பரிசாக திருப்பதி ஏழுமலையான் படத்தை அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு, ரசிகர்களை நலம் விசாரித்தார் அஜித். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பினார்.